குறள் 802

பழைமை

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்

natpitr kuruppuk keluthakaimai matrrathatrku
uppaathal saannor kadan


Shuddhananda Bharati

Intimacy

Friendship's heart is freedom close;
Wise men's duty is such to please.


GU Pope

Familiarity

Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.

The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased withsuch a right is the duty of the wise.


Mu. Varadarajan

நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச்‌ செயலாகும்‌; அந்த உரிமைச்‌ செயலுக்கு உடன்பட்டவராதல்‌ சான்றோரின்‌ கடமையாகும்‌.


Parimelalagar

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை.
விளக்கம்:
(வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்..)


Manakkudavar

(இதன் பொருள்) நட்பிற்கு அங்கமாவது உரிமை ; அவ் வுரிமையால் செய்யுமதற்கு உடன்படுதல் சான்றோர்க்கு இயல்பு,
(என்றவாறு). இது பேய்ச்சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமையுண்டா காது போல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாதலான் உடன்படல் வேண்டு மென்றது.