Kural 801
குறள் 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
palaimai yenappaduvathu yaathaenin yaathum
kilamaiyaik keelndhthitaa natpu
Shuddhananda Bharati
That friendship is good amity
Which restrains not one's liberty.
GU Pope
Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act.
Intimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (oflongstanding intimacy).
Mu. Varadarajan
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
Parimelalagar
பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு.
விளக்கம்:
('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின, சிதைத்தல் - விலக்கல், இதனான், 'பழைமையாவது காலஞ்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு,' என்பது கூறப்பட்டது..)
Manakkudavar
பழைமையாவது நட்டோரது உரிமை கூறுதல். இஃது அவருரியையால் செய்தனவற்றிற்குப் பொறுக்கவேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொன் றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு,
(என்றவாறு). இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.