குறள் 800

நட்பாராய்தல்

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு

maruvuka maachatrraar kaenmaion reeththum
oruvuka oppilaar natpu


Shuddhananda Bharati

Testing friendship

The blameless ones as friends embarace;
Give something and give up the base.


GU Pope

Investigation in forming Friendships

Cling to the friendship of the spotless one's; whate'er you pay.
Renounce alliance with the men of evil way.

Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of thosewho do not agree (with the world).


Mu. Varadarajan

குற்றமற்றவருடைய நட்பைக்‌ கொள்ளவேண்டும்‌: ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக்‌ கொடுத்தாவது கைவிடவேண்டும்‌.


Parimelalagar

மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக.
விளக்கம்:
(உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயி னும், தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக,
(என்றவாறு)