Kural 799
குறள் 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
kedungkaalaik kaividuvaar kaenmai adungkaalai
ullinum ullanj sudum
Shuddhananda Bharati
Friends who betray at ruin's brink
Burn our mind ev'n at death to think.
GU Pope
Investigation in forming Friendships
Of friends deserting us on ruin's brink,
'Tis torture e'en in life's last hour to think.
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity willburn one's mind at the time of death.
Mu. Varadarajan
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
Parimelalagar
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும், உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.
விளக்கம்:
(நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடீதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்,' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.) --
Manakkudavar
(இதன் பொருள்) கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல் லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்; அவர் கொல்லு மதனினும், (எ-று) இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.