குறள் 798

நட்பாராய்தல்

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

ullatrka ullachiirukuva kollatrka allatrkan
allatrkan aatrraruppaar natpu


Shuddhananda Bharati

Testing friendship

Off with thoughts that depress the heart
Off with friends that in woe depart.


GU Pope

Investigation in forming Friendships

Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.

Do not think of things that discourage your mind, nor contract friendship with those who wouldforsake you in adversity.


Mu. Varadarajan

ஊக்கம்‌ குறைவதற்குக்‌ காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்‌; அதுபோல்‌ துன்பம்‌ வந்த போது கைவிடுகின்றவரின்‌ நட்பைக்‌ கொள்ளாதிருக்க வேண்டும்‌.


Parimelalagar

உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற் கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக.
விளக்கம்:
(உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தான் சிறு குமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அது போல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.