குறள் 797

நட்பாராய்தல்

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

oothiyam yenpathu oruvatrkup paethaiyaar
kaenmai oreei vidal


Shuddhananda Bharati

Testing friendship

Keep off contacts with fools; that is
The greatest gain so say the wise.


GU Pope

Investigation in forming Friendships

'Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away.

It is indead a gain for one to renounce the friendship of fools.


Mu. Varadarajan

ஒருவனுக்கு ஊதியம்‌ என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன்‌ செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக்‌ கைவிடுதலாகும்‌,


Parimelalagar

ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஓரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.
விளக்கம்:
நட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் "வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்' என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.
விளக்கம்:
(நாலடி. 180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதா ரோடு நட்பாடுதலை நீங்க வ. தேல்,
(என்றவாறு) இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது.