Kural 796
குறள் 796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
kaettinum untohr uruthi kilaignyarai
neetti alappathor koal
Shuddhananda Bharati
Is there a test like misfortune
A rod to measure out kinsmen?
GU Pope
Investigation in forming Friendships
Ruin itself one blessing lends:
'Tis staff that measures out one's friends.
Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection ofone's) relations.
Mu. Varadarajan
கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
Parimelalagar
கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு.
விளக்கம்:
(தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பது பற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர். இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) கேடுவந்தவிடத்தும் ஒருபயனுண்டாம்; அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி யளந்தறிதற்கு ஒரு கோலமாதலால்,
(என்றவாறு). மேல் கெடுங்காலைக்கை விடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமா றென்னை யென்றார்க்கு , கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார்.