குறள் 795

நட்பாராய்தல்

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்

alachsolli allathu itiththu valakkariya
vallaarnatpu aaindhthu kolal


Shuddhananda Bharati

Testing friendship

Who make you weep and chide wrong trends
And lead you right are worthy friends.


GU Pope

Investigation in forming Friendships

Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over acrime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teachyou (the ways of) the world.


Mu. Varadarajan

நன்மையில்லாத செயலைக்‌ கண்டபோது வருந்தும்‌ படியாக இடித்துச்‌ சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின்‌ நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்‌.


Parimelalagar

அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக் கருதின்சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; 'ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க.
விளக்கம்:
('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.)


Manakkudavar

(இதன் பொருள்) குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியல்லாதனவற்றிற் குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க,
(என்றவாறு) இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.