குறள் 793

நட்பாராய்தல்

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு

kunamum kutimaiyum kutrramum kunraa
inanum arindhthiyaakka natpu


Shuddhananda Bharati

Testing friendship

Temper, descent, defects and kins
Trace well and take companions.


GU Pope

Investigation in forming Friendships

Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.

Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one'srelations.


Mu. Varadarajan

ஒருவனுடைய குணத்தையும்‌, குடிப்பிறப்பையும்‌, குற்றத்தையும்‌, குறையாத இனத்தாரின்‌ இயல்பையும்‌ அறிந்து அவனோடு நட்புக்‌ கொள்ளவேண்டும்‌.


Parimelalagar

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க-அவனோடு நட்புச் செய்க.
விளக்கம்:
(குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இன்னும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பர் அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுடைய குணமும் - குடிப்பிறப்பும் - குற்றமும் - குறைவில் லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க,
(என்றவாறு). இவையெல்லாம் ஒத்தனவாயின், உறவு நீளச் செல்லுமென்றவாறாம்.