குறள் 791

நட்பாராய்தல்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

naataathu natdalitr kaetillai natdapin
veetillai natpaal pavarkku


Shuddhananda Bharati

Testing friendship

Than testless friendship nought is worse
For contacts formed will scarcely cease.


GU Pope

Investigation in forming Friendships

To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.

As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is noevil so great as contracting a friendship without due inquiry.


Mu. Varadarajan

நட்புச்‌ செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை: ஆகையால்‌ ஆராயாமல்‌ நட்புச்‌ செய்வதைப்‌ போல்‌ கெடுதியானது வேறு இல்லை.


Parimelalagar

நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை-ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை.
விளக்கம்:
(ஆராய்தல்: குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு-ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும், அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை,' என்றும் கூறினார்.)


Manakkudavar

நட்பாராய்தலாவது நட்பிற்கு ஆவாரை ஆராய்ந்து கொள்ளுமாறு கூறு தல். நட்குங்கால் ஆராய்ந்து நட்கவேண்டுமாதலின், அதன் பின் இது கூறப்பட் டது. (இதன் பொருள்) நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய் வது போலக் கேடுதருவதில்லை; நட்டபின், அவனை விடுதலில்லை யாயின், (எ-று). இது நட்பாராய்தல் வேண்டு மென்றது.