குறள் 74

அன்புடைமை

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

anpueenum aarvam utaimai athueenum
athueenum nanpaennum naataachiirappu


Shuddhananda Bharati

Loving

Love yields aspiration and thence
Friendship springs up in excellence.


GU Pope

The Possession of Love

From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.

Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.


Mu. Varadarajan

அன்பு, பிறரிடம்‌ விருப்பம்‌ உடையவராக வாழும்‌ தன்மையைத்‌ தரும்‌; அஃது எல்லோரிடத்திலும்‌ நட்பு என்று சொல்லப்படும்‌ அளவற்ற சிறப்பைத்‌ தரும்‌.


Parimelalagar

அன்பு ஆர்வமுடைமை ஈனும் ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும்-அவ்விருப்பமுடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.
விளக்கம்:
(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச் சிறப்பு' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) அன்பு தரும் ஆர்வமுடைமையை ; அவ்வார்வமுடைமை தரும், நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை,
(என்றவாறு)