குறள் 73

அன்புடைமை

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

anpodu iyaindhtha valakkenpa aaruyirkku
yenpodu iyaindhtha thodarpu


Shuddhananda Bharati

Loving

Soul is encased in frame of bone
To taste the life of love alone.


GU Pope

The Possession of Love

Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).


Mu. Varadarajan

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும்‌ வாழ்க்கையின்‌ பயன்‌ என்று கூறுவர்‌.


Parimelalagar

ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப-அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத் தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப் பிறப்பின்கண் உடம்போடு இடை விடாத நட்பினை,
(என்றவாறு).