குறள் 71

அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

anpitrkum untoh ataikkundhthaal aarvalar
punkaneer poochal tharum


Shuddhananda Bharati

Loving

What bolt can bar true love in fact
The trickling tears reveal the heart.


GU Pope

The Possession of Love

And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.


Mu. Varadarajan

அன்புக்கும்‌ அடைத்துவைக்கும்‌ தாழ்‌ உண்டோ? அன்புடையவரின்‌ சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும்‌ அன்பைப்‌) பலரும்‌ அறிய வெளிப்படுத்திவிடும்‌.


Parimelalagar

அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ-அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ; ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள் நின்ற அன்பினை எல்லாரும் அறியத் தூற்றும் ஆதலான்.
விளக்கம்:
(உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை., கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான் அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)


Manakkudavar

அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதலுடையவனாதல். (இதன் பொருள்) அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உள தாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்,
(என்றவாறு). 10