Kural 70
குறள் 70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
makanthandhthaikku aatrrum uthavi ivanthandhthai
yennotrraan kolyenum sol
Shuddhananda Bharati
The son to sire this word is debt
"What penance such a son begot!"
GU Pope
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'
(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.
Mu. Varadarajan
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, “இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ' என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
Parimelalagar
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி- கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது: இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும்சொல்-தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல்.
விளக்கம்:
('சொல்' என்பது நிகழ்த்துதல் ஆகிய தன் காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல்-அங்ஙனம் தோன்ற ஒழுகல். இதனால் புதல்வன் கடன் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என்ன தவஞ் செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல்,
(என்றவாறு). இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்க முடையனாக வேண்டுமென்றது. 10)