குறள் 69

புதல்வரைப் பெறுதல்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

eenra poluthin paerithuvakkum thanmakanaich
saannon yenakkaetda thaai


Shuddhananda Bharati

The wealth of children

The mother, hearing her son's merit
Delights more than when she begot.


GU Pope

The Obtaining of Sons

When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore.

The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.


Mu. Varadarajan

தன்‌ மகனை நற்பண்பு நிறைந்தவன்‌ எனப்‌ பிறர்‌ சொல்லக்‌ கேள்வியுற்ற தாய்‌, தான்‌ அவனைப்‌ பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப்‌ பெரிதும்‌ மகிழ்வாள்‌.


Parimelalagar

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்-தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்.
விளக்கம்:
(கவானின் மகற்கண்ட பொது உவகையினும் சால்புடையன் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், பெண்ணியல்பால் தானாக அறியாமையின் 'கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது, சான்றோன் என்றற்கு உரியார் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தான் பெற்ற காலத்தினும் மிக மகிழும் ; தன்மகனைச் சான்றோ னென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்,
(என்றவாறு).