Kural 709
குறள் 709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்
pakaimaiyum kaenmaiyum kannuraikkum kannin
vakaimai unarvaarp paerin
Shuddhananda Bharati
Friend or foe the eyes will show
To those who changing outlooks know.
GU Pope
The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye's swift varying moods to scan.
If aking gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will(themselves) reveal (to him) their hatred or friendship.
Mu. Varadarajan
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால், (ஒருவனுடைய மனத்தில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லிவிடும்.
Parimelalagar
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்-வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும்.
விளக்கம்:
(இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன; வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல் லும்; கண்ணினது வேறுபாட்டை யறிவாரைப் பெறின்,
(என்றவாறு). இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.