குறள் 708

குறிப்பறிதல்

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

mukamnokki nitrka amaiyum akamnokki
utrra thunarvaarp paerin


Shuddhananda Bharati

Divining the mind

Just standing in front would suffice
For those who read the mind on face.


GU Pope

The Knowledge of Indications

To see the face is quite enough, in presence brought,
When men can look within and know the lurking thought.

If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred(to him) it is enough that he stand looking at their face.


Mu. Varadarajan

உள்ளக்‌ குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப்‌ பெற்றால்‌,(அவரிடம்‌ எதையும்‌ கூறாமல்‌) அவருடைய முகத்தை நோக்கி நின்றால்‌ போதும்‌.


Parimelalagar

அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்-அவர் தன் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.
விளக்கம்:
('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து சொல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இறல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) முகத்தை நோக்கி நிற்க, அமையும் ; தன் மனத்தை நோக்கி அறி யலுற்றதனை அறியவல்லாரைப் பெறின்,
(என்றவாறு). இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டுமென்றது.