குறள் 707

குறிப்பறிதல்

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

mukaththin muthukkuraindhthathu untoh uvappinum
kaayinum thaanmundh thurum


Shuddhananda Bharati

Divining the mind

Than face what is subtler to tell
First if the mind feels well or ill.


GU Pope

The Knowledge of Indications

Than speaking countenance hath aught more prescient skill?
Rejoice or burn with rage, ‘tis the first herald still!

Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is)pleased or vexed.


Mu. Varadarajan

ஒருவன்‌ விருப்பம்‌ கொண்டாலும்‌ வெறுப்புக்‌ கொண்டாலும்‌, அவனுடைய முகம்‌ முற்பட்டு அதைத்‌ தெரிவிக்கும்‌; அம்‌ முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?


Parimelalagar

உவப்பினும் காயினும் தான் முந்துறும்-உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-முகம் போல அறிவு மிக்கது பிறிது உண்டோ? இல்லை.
விளக்கம்:
('உயிர்க்கே அறிவுள்ளது; ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருதியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) முகம் போல் முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும், (எ - று ). குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.