குறள் 706

குறிப்பறிதல்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

aduththathu kaatdum palingkupol naenjcham
kaduththathu kaatdum mukam


Shuddhananda Bharati

Divining the mind

What throbs in mind the face reflects
Just as mirror nearby objects.


GU Pope

The Knowledge of Indications

As forms around in crystal mirrored clear we find,
The face will show what's throbbing in the mind.

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.


Mu. Varadarajan

தன்னை அடுத்த பொருளைத்‌ தன்னிடம்‌ காட்டும்‌ பளிங்கு போல்‌. ஒருவனுடைய நெஞ்சத்தில்‌ மிகுந்துள்ளதை அவனுடைய முகம்‌ காட்டும்‌


Parimelalagar

அடுத்தது காட்டும் பளிங்கு போல்-தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்-ஒருவன் நெஞசத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்.
விளக்கம்:
('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல, நெஞ்சத்து மிக்க தனை முகம் காட்டும், (எ - று. இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும், மகிழ்ச்சியுண்டா யின் மலர்ந்தும், காட்டு மென்றது.