Kural 705
குறள் 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
kurippitr kurippunaraa vaayin uruppinul
yenna payaththavo kan
Shuddhananda Bharati
Among senses what for is eye
If thought by thought one can't descry?
GU Pope
By sign who knows not sings to comprehend, what gain,
'Mid all his members, from his eyes does he obtain?
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.
Mu. Varadarajan
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்?
Parimelalagar
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின்-குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ-ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன?
விளக்கம்:
(முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது; அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக்குறிப்பை யறிய மாட்டாவாயின், தன்னுறுப்புக்களுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ? இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.