குறள் 702

குறிப்பறிதல்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

aiyap pataaathu akaththathu unarvaanaith
thaeivaththo doppak kolal


Shuddhananda Bharati

Divining the mind

Take him as God who reads the thought
Of another man without a doubt.


GU Pope

The Knowledge of Indications

Undoubting, who the minds of men can scan,
As deity regard that gifted man.

He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).


Mu. Varadarajan

ஐயப்படாமல்‌ மனத்தில்‌ உள்ளதை உணரவல்லவனை (அவன்‌ மனிதனே ஆனாலும்‌) தெய்வத்தோடு ஒப்பாகக்‌ கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை தெய்வத்தொடு ஒப்பக்கொளல்-மகனேயாயினும், தெய்வத்தொடு ஒப்ப நன்கு மதிக்க.
விளக்கம்:
(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடு ஒப்ப' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல் லாரை, தேவரோடு ஒப்பக் கொள்க, (எ - று )