குறள் 700

மன்னரைச் சேர்ந்தொழுதல்

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

palaiyam yenakkaruthip panpalla seiyum
keluthakaimai kaedu tharum


Shuddhananda Bharati

Walk with kings

Worthless acts based on friendship old
Shall spell ruin and woe untold.


GU Pope

Conduct in the Presence of the King

Who think 'We're ancient friends' and do unseemly things;
To these familiarity sure ruin brings.

The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity(with the king) will ensure his ruin.


Mu. Varadarajan

"யாம்‌ அரசர்க்குப்‌ பழைமையானவராய்‌ உள்ளோம்‌ எனக்‌ கருதித்‌ தகுதி அல்லாதவற்றைச்‌ செய்யும்‌ உரிமை கேட்டைத்‌ தரும்‌.


Parimelalagar

பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.
விளக்கம்:
[அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) யாம் பழைமையுடையோ மென்று கருதி, இயல்பல்லாதன வற்றைச் செய்யும் நட்பின் தகைமை, தமக்குக் கேட்டைத்தரும்,
(என்றவாறு) இது பின் பகையாவனவற்றைத் தவிரல் வேண்டுமென்றது.