Kural 699
குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
kolappattaem yenraennik kollaatha seiyaar
thulakkatrra kaachi yavar
Shuddhananda Bharati
The clear-visioned do nothing base
Deeming they have the monarch's grace.
GU Pope
Conduct in the Presence of the King
"We've gained his grace, boots nought what graceless acts we do',
So deem not sages who the changeless vision view.
Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (withinthemselves) "We are esteemed by the king".
Mu. Varadarajan
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்' என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
Parimelalagar
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலை பெற்ற அறிவினையுடையார்.
விளக்கம்:
[கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், ன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.]
Manakkudavar
(இதன் பொருள்) யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோ மென்று நினைத்து, அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார்,
(என்றவாறு) இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.