Kural 696
குறள் 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்
kuripparindhthu kaalang karuthi vaeruppila
vaendupa vaetpach solal
Shuddhananda Bharati
Discern his mood and time and tell
No dislikes but what king likes well.
GU Pope
Conduct in the Presence of the King
Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
Mu. Varadarajan
அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.
Parimelalagar
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி - சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக.
விளக்கம்:
[குறிப்புக் காரியத்தின் கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனிற்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேண்டாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.]
Manakkudavar
(இதன் பொருள்) அரசன் குறிப்பறிந்து, காலம் பார்த்து, வெறுப்பில்லாதன வாய், சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க,
(என்றவாறு). இது சொல்லுந் திறம் கூறிற்று.