குறள் 695

மன்னரைச் சேர்ந்தொழுதல்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை

yepporulum oaraar thodaraarmatr rapporulai
vitdakkaal kaetka marai


Shuddhananda Bharati

Walk with kings

Hear not, ask not the king's secret
Hear only when he lets it out.


GU Pope

Conduct in the Presence of the King

Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!

(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear


Mu. Varadarajan

(அரசர்‌ மறைப்பொருள்‌ பேசும்போது எப்பொருளையும்‌ உற்றுக்கேட்காமல்‌, தொடர்ந்து வினவாமல்‌, அப்பொருளை அவரே விட்டுச்‌ சொன்னபோது கேட்டறிய வேண்டும்‌.


Parimelalagar

மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கோளாது; தொடரார்- அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன்தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.
விளக்கம்:
['ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.]


Manakkudavar

(இதன் பொருள்) யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால் பின்பு கேட்க,
(என்றவாறு). இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.