குறள் 694

மன்னரைச் சேர்ந்தொழுதல்

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து

sevichsollum saerndhtha nakaiyum aviththolukal
aanra paeriyaa rakaththu


Shuddhananda Bharati

Walk with kings

Whisper not; nor smile exchange
Amidst august men's assemblage.


GU Pope

Conduct in the Presence of the King

All whispered words and interchange of smiles repress,
In presence of the men who kingly power possess.

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.


Mu. Varadarajan

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில்‌, (மற்றொருவன்‌) செவியை நெருங்கிச்‌ சொல்லுதலும்‌ உடன்‌ சேர்ந்து நகைத்தலும்‌ செய்யாமல்‌ ஒழுக வேண்டும்‌.


Parimelalagar

ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக.
விளக்கம்:
[சேர்தல்:பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.]


Manakkudavar

(இதன் பொருள்) அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம் மில் நகுதலும், தவிர்ந்தொழுகல் வேண்டும். (எ-று). இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.