குறள் 691

மன்னரைச் சேர்ந்தொழுதல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

akalaathu anukaathu theekkaaivaar polka
ikalvaendhtharch saerndhtholuku vaar


Shuddhananda Bharati

Walk with kings

Move with hostile kings as with fire
Not coming close nor going far.


GU Pope

Conduct in the Presence of the King

Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;
Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.

Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.


Mu. Varadarajan

அரசரைச்‌ சார்ந்து வாழ்கின்றவர்‌, அவரை மிக நீங்காமலும்‌, மிக அணுகாமலும்‌ நெருப்பில்‌ குளிர்‌ காய்கின்றவர்போல இருக்க வேண்டும்‌.


Parimelalagar

இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - மாறுபாடுதலையுடைய அரசரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.
விளக்கம்:
[கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல் வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கெடாது, மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.]


Manakkudavar

மன்னரைச் சேர்ந்தொழுகலாவது அரசர் மாட்டு அமாத்தியர் ஒழுகுந்திறங் கூறுதல். இது முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறுகின்றவை தம்மரசர் மாட்டு வேண்டுமாயினும், மாற்றரசர்மாட்டும் வேண்டுதல் இன்றியமையாத சிறப்புடைத்தாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர், அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல் இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.