குறள் 690

தூது

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது

iruthi payappinum yenjsaathu iraivatrku
uruthi payappathaam thoothu


Shuddhananda Bharati

The embassy

Braving death the bold envoy
Assures his king's safety and joy.


GU Pope

The Envoy

Death to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king.

He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (todeliver his message).


Mu. Varadarajan

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும்‌, அதற்காக அஞ்சி விட்டுவிடாமல்‌, தன்‌ அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்‌.


Parimelalagar

இறுதி பயப்பினும் எஞ்ஞாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான்.
விளக்கம்:
['இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன் மையைத் தருவது தூதாவது,
(என்றவாறு).