குறள் 689

தூது

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்

vidumaatrram vaendhtharkku uraippaan vadumaatrram
vaaisaeraa vanka navan


Shuddhananda Bharati

The embassy

The envoy who ports the king's message
Has flawless words and heart's courage.


GU Pope

The Envoy

His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.

He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter eveninadvertently what may reflect discredit (on the latter).


Mu. Varadarajan

குற்றமான சொற்களை வாய்‌ சோர்ந்தும்‌ சொல்லாத உறுதி உடையவனே அரசன்‌ சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும்‌ தகுதியுடையவன்‌.


Parimelalagar

விடு மாற்றன் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய் சோரா வன் கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான்.
விளக்கம்:
[தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன், தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்,
(என்றவாறு).