குறள் 688

தூது

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு

thooimai thunaimai thunivutaimai immoonrin
vaaimai valiyuraippaan panpu


Shuddhananda Bharati

The embassy

The true envoy of three virtues
Is pure helpful and bold in views.


GU Pope

The Envoy

Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.

The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (offoreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.


Mu. Varadarajan

தூய ஒழுக்கம்‌ உடையவனாதல்‌, துணை உடையவனாதல்‌, துணிவு உடையவனாதல்‌ இந்த மூன்றும்‌ வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்‌.


Parimelalagar

வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந்தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. .
விளக்கம்:
[பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி, 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும், யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.]


Manakkudavar

(இதன் பொருள்) தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம் மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம், (எ - று ). தூய்மை - மெய்யும் மனமும் தூயனாதல்.