Kural 680
குறள் 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
uraisiriyaar ulnadungkal achik kuraipaerin
kolvar paeriyaarp panindhthu
Shuddhananda Bharati
Small statesmen fearing people's fear
Submit to foes superior.
GU Pope
The men of lesser realm, fearing the people’s inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head.
Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.
Mu. Varadarajan
வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.
Parimelalagar
உறை சிறியார் - ஆளும் இடஞ்சிறியராய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி - தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம் பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார். அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்.
விளக்கம்:
[இடம்:நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேற் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிது கொடுத்தும் சந்தியை ஏற்றுக் கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின், 'கொள்வர்' என உலகியலால் கூறினார். இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.]
Manakkudavar
(இதன் பொருள்) உறையும் இடம். சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின், தம்மின் பெரியாரைத் தாழ்ந்து . நட்பாகக் கொள்வர்.) இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.