குறள் 679

வினைசெயல்வகை

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

nattaarkku nalla seyalin viraindhthathae
ottaarai ottik kolal


Shuddhananda Bharati

Modes of action

Than doing good to friends it is
More urgent to befriend the foes.


GU Pope

The Method of Acting

Than kindly acts to friends more urgent thing to do,
Is making foes to cling as friends attached to you.

One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.


Mu. Varadarajan

பகைவராக உள்ளவரைப்‌ பொருந்துமாறு சேர்த்துக்‌ கொள்ளல்‌, நண்பர்க்கு உதவியானவற்றைச்‌ செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்‌.


Parimelalagar

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொளல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக்கோடல்.
விளக்கம்:
[அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பர், 'விரைந்தது' என்றார். 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.]


Manakkudavar

(இதன் பொருள்) தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும், பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும்,
(என்றவாறு). இஃது அரசர்க்கும் ஒக்கக கொள்ள வேண்டுமாயினும், அமைச்சர் தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது