குறள் 676

வினைசெயல்வகை

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

mutivum itaiyoorum mutrriyaangku yeithum
padupayanum paarththuch seyal


Shuddhananda Bharati

Modes of action

Weigh well the end, hindrance, profit
And then pursue a fitting act.


GU Pope

The Method of Acting

Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,—then let the work be done!

An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).


Mu. Varadarajan

செயலை முடிக்கும்‌ வகையும்‌, வரக்கூடிய இடையூறும்‌, முடிந்தபோது கிடைக்கும்‌ பெரும்பயனும்‌ ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்‌.


Parimelalagar

முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர் தூக்கிச் செய்க.
விளக்கம்:
[முடிவு, ஆகுபெயர். 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரியதாயின் செய்க' என்பதாம்]


Manakkudavar

(இதன் பொருள்) வினை தொடங்கினால் அது முடியும் வண்ண மும், அதற்கு வரும் இடையூறும், முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு, பின்பு வினைசெய்க,
(என்றவாறு).