Kural 675
குறள் 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
porulkaruvi kaalam vinaiyidanodu aindhthum
irultheera yennich seyal
Shuddhananda Bharati
Money and means, time, place and deed
Decide these five and then proceed.
GU Pope
Treasure and instrument and time and deed and place of act :
These five, till every doubt remove, think o’er with care exact.
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
Mu. Varadarajan
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
Parimelalagar
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினை செய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க.
விளக்கம்:
[எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும் கருவி - தன் தானையும் மாற்றார்தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்லவினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.]
Manakkudavar
(இதன் பொருள்) பொருளும், கருவியும், காலமும், வினையும், வினை செய்யும் இடமும் மென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணி, பின்பு வினைசெயத் தொடங் குக,
(என்றவாறு). இவற்றுள், ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும் :- (1) பொருளா வது கெடும்பொருளும் பெறும் பொருளும்; (2) கருவியாவது தனக்கு உள்ள படை யும் மாற்றரசர்க்கு உள்ள படையும் ;(2) காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும்; (4) வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினை யும்; (5) இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய் யும் வினைக்கு முற்பட வேண்டுதலின், முற்கூறப்பட்டன.