குறள் 672

வினைசெயல்வகை

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

thoongkuka thoongkich seyatrpaala thoongkatrka
thoongkaathu seiyum vinai


Shuddhananda Bharati

Modes of action

Delay such acts as need delay
Delay not acts that need display.


GU Pope

The Method of Acting

Slumber when sleepy work’s in hand: beware
Thou slumber not when action calls for sleepless care

Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.


Mu. Varadarajan

காலந்தாழ்த்துச்‌ செய்யத்‌ தக்கவற்றைக்‌ காலந்தாழ்த்தே செய்யவேண்டும்‌; காலந்தாழ்க்காமல்‌ விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச்‌ செய்யக்‌ காலந்தாழ்த்தக்கூடாது.


Parimelalagar

தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக.
விளக்கம்:
[இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவதை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார் (குறள் 383); ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்)தாழ்த்துச் செய்யவேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க; தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க,
(என்றவாறு).