Kural 671
குறள் 671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
koolchi mutivu thunivaeithal aththunivu
thaalchiyul thangkuthal theethu
Shuddhananda Bharati
When counsel takes a resolve strong
Weak delay of action is wrong.
GU Pope
Resolve is counsel’s end. If resolutions halt
In weak delays, still unfulfilled, ’tis grievous fault.
Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.
Mu. Varadarajan
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
Parimelalagar
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது குற்றமுடைத்து.
விளக்கம்:
['சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் எனவே, துணிவு எய்தும் அளவும் சூழ வேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு; செய்யுங்காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழி வாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் 'தீது' என்றார்.]
Manakkudavar
வினைசெயல்வகையாவது வினை செய்யுமாறு கூறுதல். மேல் வினை செய் யுங்கால் திண்ணியராக வேண்டு மென்று கூறினார் திண்ணியார் வினை செய் யும் வண்ணம் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்; அவ்வாறு துணிந்த வினை நீட்டித்தலின்கண்ணே கிடக்குமாயின், அது தீதாம்,
(என்றவாறு). இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின், அதனையறிந்து பகை வர் தம்மைக் காப்பார்; ஆதலால், நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டும் மென்றது.