குறள் 670

வினைத்திட்பம்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு

yenaiththitpam yeithiyak kannum vinaiththitpam
vaentaarai vaentaathu ulaku


Shuddhananda Bharati

Powerful acts

The world merits no other strength
But strength of will-to-do at length.


GU Pope

Power in Action

The world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest.

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.


Mu. Varadarajan

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்‌, செய்யும்‌ தொழிலில்‌ உறுதி இல்லாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றாது.


Parimelalagar

வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர்.
விளக்கம்:
[மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம்; ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பதுபற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்ற விடத்தும், வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்,
(என்றவாறு) பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்ப மின்றானால் வருங் குற்ற மென்னை யென்றார்க்கு , இது கூறப்பட்டது.