குறள் 668

வினைத்திட்பம்

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்

kalangkaathu kanda vinaikkan thulangkaathu
thookkang katindhthu seyal


Shuddhananda Bharati

Powerful acts

Waver not; do wakefully
The deed resolved purposefully.


GU Pope

Power in Action

What clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil.

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.


Mu. Varadarajan

மனம்‌ கலங்காமல்‌ ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச்‌ சோர்வு கொள்ளாமல்‌ காலந்‌ தாழ்த்தாமல்‌ செய்து முடிக்க வேண்டும்‌.


Parimelalagar

கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித் தலை யொழிந்து செய்க.
விளக்கம்:
[கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பம் உடைமை].


Manakkudavar

(இதன் பொருள்) கலக்கமின்றி ஆராய்ந்து கண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்க மின்றி, அதனை நீட்டியாது செய்க,
(என்றவாறு). இது விரைந்து செய்ய வேண்டு மென்றது.