குறள் 667

வினைத்திட்பம்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

uruvukandu yellaamai vaendum urulpaerundhthaerkku
achsaani annaar utaiththu


Shuddhananda Bharati

Powerful acts

Scorn not the form: for men there are
Like linchpin of big rolling car.


GU Pope

Power in Action

Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.


Mu. Varadarajan

உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.


Parimelalagar

உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமைநோக்கி இதழ்தலை யொழிக.
விளக்கம்:
[சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம். அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து; அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர்; அவரை அத்திட்பம் நோக்கி அறிந்து கொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்த்தல் வேண்டும்; உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங் கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ் வுலகம் உடைத்து ; ஆதலால்,
(என்றவாறு).