Kural 663
குறள் 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்
kataikkotkach seithakka thaanmai itaikkotkin
yetrraa vilumandh tharum
Shuddhananda Bharati
The strong achieve and then display
Woe unto work displayed midway.
GU Pope
Man's fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.
So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.
Mu. Varadarajan
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
Parimelalagar
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்க புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.
விளக்கம்:
[மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும்; தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான். அவர் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை' எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல் செய்வானை விலக்குதல் செய்வர் ஆகலின், அவற்றான் வருவன. விழுமம்: சாதிப் பெயர். இவை இரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.]
Manakkudavar
(இதன் பொருள்) ஒரு வினையைத் தொடங்கினால், முடிவிலே சென்று மீளல் செய் வது ஆண்மையாவது ; இடையிலே மீள்வனாயின், அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும்,
(என்றவாறு). சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்ய வேண்டுமென்றது.