குறள் 664

வினைத்திட்பம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

solluthal yaarkkum yeliya ariyavaam
solliya vannam seyal


Shuddhananda Bharati

Powerful acts

Easy it is to tell a fact
But hard it is to know and act.


GU Pope

Power in Action

Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to doaccording to what has been said.


Mu. Varadarajan

"இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்‌' என்று சொல்லுதல்‌ எவர்க்கும்‌ எளியனவாம்‌ ; சொல்லியபடி செய்து முடித்தல்‌ அரியனவாம்‌.


Parimelalagar

சொல்லுதல் யார்க்கும் எளிய -யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
விளக்கம்:
[சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின், 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர். கும் எளிய வாம்; அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்,
(என்றவாறு)