Kural 661
குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
vinaiththitpam yenpathu oruvan manaththitpam
matrraiya yellaam pira
Shuddhananda Bharati
A powerful mind does powerful act
And all the rest are imperfect.
GU Pope
What men call ‘power in action' know for 'power of mind'
Externe to man all other aids you find.
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.
Mu. Varadarajan
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.
Parimelalagar
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினை செய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானோருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா.
விளக்கம்:
[ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள், அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இவ்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.]
Manakkudavar
வினைத்திட்பமாவது வினையின் கண் திண்ணியராதல். மேல் நல்வினையைச் செய்யவேண்டு மென்றார். அது செய்யுங்கால் திண்ணியராகிச் செயல்வேண்டு மாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒரு வன் மனத்து உண்டான திண்மை; அதனை யொழிய, மற்றவையெல்லாம் தின்மையென்று சொல்லப்படா, (எ - று ). மற்றவையென்றது கருவியும் உபாயமும்.