குறள் 660

வினைத்தூய்மை

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

chalaththaal porulseithae maarththal pasuman
kalaththulneer paeithireei yatrru


Shuddhananda Bharati

Purity of action

The wealth gathered in guilty ways
Is water poured in wet clay vase.


GU Pope

Purity in Action

In pot of clay unburnt he water pours and would retain,
Who seeks by wrong the realm in wealth and safety to maintain.

(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.


Mu. Varadarajan

வஞ்சனையான வழியால்‌ பொருளைச்‌ சேர்த்துக்‌ காப்பாற்றுதல்‌, பச்சை மண்கலத்துள்‌ நீரைவிட்டு அதைக்‌ காப்பாற்றி வைத்தாற்‌ போன்றது.


Parimelalagar

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று-பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும்.
விளக்கம்:
[முன் ஆக்கம் பயப்பன்போல் தோன்றப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று. ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு. இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப்போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமாத்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார்; அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) வஞ்சத்தாலே பொருள் தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத் திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து,
(என்றவாறு) இது தானும் பொருளுங் கூடிக் கெடு மென்றது.