Kural 659
குறள் 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
alakkonda yellaam alappom ilappinum
pitrpayakkum natrpaa lavai
Shuddhananda Bharati
Gains from weeping, weeping go
Though lost, from good deeds blessings flow.
GU Pope
What's gained through tears with tears shall go;
From loss good deeds entail harvests of blessings grow.
All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.
Mu. Varadarajan
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
Parimelalagar
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும்.
விளக்கம்:
['பின்' எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.]
Manakkudavar
(இதன் பொருள்) பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்; அவ்வாறன்றி அறப்பகுதியால் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும், பின்பு பயன்படும்,
(என்றவாறு). இது தேடின பொருள் போமென்றது.