குறள் 658

வினைத்தூய்மை

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

katindhtha katindhthoraar seithaarkku avaithaam
mutindhthaalum peelai tharum


Shuddhananda Bharati

Purity of action

Those who dare a forbidden deed
Suffer troubles though they succeed.


GU Pope

Purity in Action

To those who hate reproof and do forbidden thing.
What prospers now, in after days shall anguish bring.

The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.


Mu. Varadarajan

ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல்‌ மேற்கொண்டு செய்தவர்க்கு, அச்‌ செயல்கள்‌ நிறைவேறினாலும்‌ துன்பமே கொடுக்கும்‌.


Parimelalagar

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதான் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா; ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும்.
விளக்கம்:
[முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள் மேல் ஏற்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யும் மவர்க்கு, அவ்வினைகள் தாம்கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும்,
(என்றவாறு). இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.