குறள் 657

வினைத்தூய்மை

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை

palimalaindhthu yeithiya aakkaththin saannor
kalinal kuravae thalai


Shuddhananda Bharati

Purity of action

Pinching poverty of the wise
Is more than wealth hoarded by Vice.


GU Pope

Purity in Action

Than store of wealth guilt-laden souls obtain,
The sorest poverty of perfect soul is richer gain.

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.


Mu. Varadarajan

பழியை மேற்கொண்டு இழிதொழில்‌ செய்து பெறும்‌ செல்வத்தைவிடச்‌ சான்றோர்‌ வினைத்தூய்மை யோடிருந்து பெறும்‌ பொல்லாத வறுமையே சிறந்தது.


Parimelalagar

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின் ; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது.
விளக்கம்:
[நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.]


Manakkudavar

(இதன் பொருள்) பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்திலும், சான்றோர் மாட்டு உள் தாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து,
(என்றவாறு). மேற் கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு, இது கூறப் பட்டது.