குறள் 649

சொல்வன்மை

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

palasollak kaamuruvar manramaa chachi
silasollal thaetrraa thavar


Shuddhananda Bharati

Power of speech

They overspeak who do not seek
A few and flawless words to speak.


GU Pope

Power in Speech

Who have not skill ten faultless words to utter plain,
Their tongues will itch with thousand words man's ears to pain.

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.


Mu. Varadarajan

குற்றமற்றவையாகிய சில சொற்களைச்‌ சொல்லத்‌ தெரியாதவர்‌, உண்மையாகவே பல சொற்களைச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்க விரும்புவர்‌.


Parimelalagar

மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றன வாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர்.
விளக்கம்:
[குற்றம் மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர். இவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.]


Manakkudavar

(இதன் பொருள்) பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார்,
(என்றவாறு). மன்ற - தெளிய . இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.