குறள் 647

சொல்வன்மை

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

solalvallan chorvilan anjsaan avanai
ikalvaellal yaarkkum arithu


Shuddhananda Bharati

Power of speech

No foe defies the speaker clear
Flawless, puissant, and free from fear.


GU Pope

Power in Speech

Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach.

It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.


Mu. Varadarajan

தான்‌ கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய்‌, சொல்லும்‌ போது சோர்வு இல்லாதவனாய்‌, அஞ்சாதவனாய்‌ உள்ளவனை மாறுபாட்டால்‌ வெல்வது யார்க்கும்‌ முடியாது.


Parimelalagar

சொலன் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின் கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
விளக்கம்:
[ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல். சோர்வு சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல். இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோரவிடுதலும் இல் லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது,
(என்றவாறு).