குறள் 645

சொல்வன்மை

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

solluka sollaip pirithorsol achsollai
vaellunjsol inmai arindhthu


Shuddhananda Bharati

Power of speech

Speak out thy world so that no word
Can win it and say untoward.


GU Pope

Power in Speech

Speak out your speech, when once 'tis past dispute
That none can utter speech that shall your speech refute.

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.


Mu. Varadarajan

வேறொரு சொல்‌ அந்தச்‌ சொல்லை வெல்லும்‌ சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக்‌ கருதியதைச்‌ சொல்லவேண்டும்‌.


Parimelalagar

சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக.
விளக்கம்:
[பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச் சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல்; அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல், வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.]


Manakkudavar

(இதன் பொருள்) சொல்லைச் சொல்லுக ; தான் சொல்ல நினைத்த அச் சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து,
(என்றவாறு).