குறள் 620

ஆள்வினையுடைமை

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

oolaiyum uppakkam kaanpar ulaivinrith
thaalaathu ugnyatrru pavar


Shuddhananda Bharati

Manly effort

Tireless Toiler's striving hand
Shall leave even the fate behind.


GU Pope

Manly Effort

Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind.

They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.


Mu. Varadarajan

சோர்வு இல்லாமல்‌ முயற்சியில்‌ குறைவு இல்லாமல்‌ முயல்கின்றவர்‌, (செயலுக்கு இடையூறாக வரும்‌) ஊழையும்‌ ஒரு காலத்தில்‌ தோல்வியுறச்‌ செய்வர்‌.


Parimelalagar


விளக்கம்:
(தாழ்வறுதல்-சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல், ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின், பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார். தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன் படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர்,
(என்றவாறு). இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.